×

கிணற்றில் மூழ்கி கணவன், மனைவி பலி போளூர் அருகே சோகம் ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்றபோது

போளூர், மார்ச் 12: போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற கணவன், மனைவி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பெரியகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா காந்தி பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் குமார்(30), விவசாயி. இவரது மனைவி வளர்மதி(27). இவர்களது மகன்கள் சசிபிரசாத்(9), பிரகாஷ்(7). சொந்த நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இவர்களது ஆட்டுக்குட்டி நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்த குமாரின் மனைவி வளர்மதி ஆட்டுக்குட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். மனைவி கிணற்றில் குதிப்பதை பார்த்த குமாரும் விரைந்து வந்து கிணற்றில் குதித்து மீட்க முயன்றார்.

ஆனால், கிணற்றில் குதித்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நீரில் மூழ்கி இறந்தனர். அப்பகுதி மக்கள் இருவரது சடலங்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலும், போளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமாரின் தாயார் கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ேஹமாவதி, சப்- இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கிணற்றில் மூழ்கி கணவன், மனைவி பலி போளூர் அருகே சோகம் ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்றபோது appeared first on Dinakaran.

Tags : Bali Bolur ,Polur ,Shekhar Makan ,Mathura Gandhi ,Periyakaram Panchayat ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம்...