×

நிலப்பிரச்னையை தீர்த்து வைப்பதாக கட்டப்பஞ்சாயத்து செய்தவருக்கு சரமாரி வெட்டு: ஆபத்தான நிலையில் சிகிச்சை

பெரம்பூர்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை செய்யூர் கிராமம், எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள 177 சென்ட் நிலம், வேதாச்சலம் என்பவரின் மகன்களான ஓட்டேரி பழைய வாழைமா நகரை சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் ராமசாமி ஆகியோருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்த இடத்தை கிருஷ்ணன் மட்டும் அனுபவித்து வருவதாகவும், ராமசாமிக்கு சொந்தமான சொத்துக்களை அவர் தர மறுப்பதாகவும் கூறி, ராமசாமியின் மகள் சாவித்திரி மற்றும் பேரன் கவியரசன் ஆகியோர் தங்களது சொத்தை பெற முயற்சி செய்து வந்துள்ளனர். இதற்கு கிருஷ்ணன் தரப்பை சேர்ந்த அவரது உறவினர்களான நவீன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

மேற்கண்ட பிரச்னையை கவியரசன், மங்களபுரம் சேமத்தம்மன் நியூ காலனி 3வது தெருவில் வசித்து வரும் ஸ்ரீதர் (40) என்பவரிடம் கொண்டு சென்றுள்ளார். இந்த ஸ்ரீதர், தன்னிச்சையாக செயல்படம் ஒரு பத்திரிகையாளர் சங்கத்தில் வடசென்னை மாவட்ட தலைவராக இருப்பதாகவும், இந்த பதவியை வைத்து சில கட்டப் பஞ்சாயத்துகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலப் பிரச்னையை தீர்த்து வைப்பதாகவும், அதற்கு கமிஷன் கொடுக்க வேண்டும், எனவும் ஸ்ரீதர் கூறியுள்ளார். மேலும், நிலம் சம்பந்தமாக எதிர் தரப்பினரிடம் ஸ்ரீதர் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் இருதரப்பிற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மேற்கொண்ட சொத்து தொடர்பாக ஸ்ரீதர் போதையில் சுரேஷ் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நவீன் மற்றும் அவரது நண்பர் பாண்டியா ஆகியோர் ஸ்ரீதரை மேற்படி இடப்பிரச்னையில் தலையிட வேண்டாம் எனக் கூறியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. பின்பு அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஸ்ரீதர், சாவித்திரியின் மகன் கவியரசனுடன் ஆட்டோவில் ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதி அருகே வந்துள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நவீன், பாண்டியா (எ) ஸ்டீபன் ஜோசப் மற்றும் மேலும் இருவர் என 4 பேர் சேர்ந்து ஆட்டோவை வழிமறித்து ஸ்ரீதரை சரமாரியாக வெட்டினர். இதில் ஸ்ரீதருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஸ்ரீதரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகத்தில் பலத்த காயமடைந்த தருக்கு 60க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தரை வெட்டிய நவீன், பாண்டியா உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நிலப்பிரச்னையை தீர்த்து வைப்பதாக கட்டப்பஞ்சாயத்து செய்தவருக்கு சரமாரி வெட்டு: ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Behanayamman Kovil Street, Seiyur Village, East Coast Road, Chennai ,Krishnan ,Ramasamy ,Old Vazaima Nagar ,Otteri ,Vedachalam ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது