×

உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு

 

திருப்பூர், மார்ச் 12:திருப்பூர் நடராஜ் தியேட்டர் நொய்யல் பாலம் வடக்கு பகுதியில் இருந்து வளர்மதி பாலம் வரை பூங்கா பின்புறம், நொய்யல் கரையோரம் சாலை அமைத்து, அதில் சைக்கிள் உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணியினை நேற்று மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி மற்றும் கவுன்சிலர் திவாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Nataraj Theater ,Noyal Bridge ,Varamathi Bridge ,Noyal shore ,Mayor ,Dinesh Kumar ,
× RELATED திருப்பூர் நொய்யல் ஆற்றில்...