- மோடி
- பாஜக
- வலயக்குழு
- Mabi
- முதல் அமைச்சர்
- காஞ்சிபுரம்
- முன்னாள் முதல்வர்
- மத்தியப் பிரதேசம்
- சிவ்ராஜ் சிங் சௌஹான்
- ஐக்கிய நாடுகள்
- பாரதிய ஜனதா கட்சி
காஞ்சிபுரம்: ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், தமிழில் பேசி தமிழை பெருமைப்படுத்தி இருக்கிறார் மோடி என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். காஞ்சிபுரத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பாரதிய ஜனதா கட்சியின் மண்டல குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜ அகில இந்திய துணை தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காசி தமிழ் சங்கத்தை நடத்தியத்தின் மூலம் மோடி மீது மரியாதையும், அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்திலும் மோடி தமிழில் பேசி தமிழை பெருமைப்படுத்தி இருக்கிறார். தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி அளவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்.
பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின்போது செங்கோலை நிறுவி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அதனால், தமிழக மக்களும் மோடியின் மீதும் அன்பை பொழிகிறார்கள்’ என்றார். இந்நிகழ்வின்போது, தேர்தல் பொறுப்பாளர் கே.டி.ராகவன், மாவட்ட தலைவர் பாபு, நிர்வாகிகள் உத்தரகுமார், ஜம்போடை சங்கர், காஞ்சி ஜீவா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post பாஜ மண்டல குழு ஆலோசனை கூட்டம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தியவர் மோடி: மபி முன்னாள் முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.