×

தனியார் பள்ளிகளில் படிக்கும் 4.17 லட்சம் குழந்தைகளுக்காக ரூ.389.59 கோடி வழங்கப்படும்: இயக்குநர் நாகராஜ முருகன் தகவல்

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு ெகாண்டு வந்த குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களில் சமூகத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் 25 சதவீதம் சேர்க்கப்பட்டு கல்வி கற்பிக்க வேண்டும். அதற்கான செலவை மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2013-2014ம் ஆண்டு முதல் இந்த சேர்க்கை தொடங்கப்பட்டு 2017-2018ம் கல்வி ஆண்டு முதல் 25% ஒதுக்கீட்டின் கீழ் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் பெறப்பட்டு சேர்க்கை நடந்து வருகிறது.

2021-2022ம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணத் தொகை ரூ.364 கோடியே 44 லட்சம் அனைத்து பள்ளிகளுக்கும் நிலுவை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2022-2023ம் கல்வி ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 65 ஆயிரத்து 946 குழந்தைகள் மற்றும் தொடர்ந்து படித்து வரும் குழந்தைகள் 3 லட்சத்து 51 ஆயிரத்து 122 பேரையும் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 பேரின் விவரம் மாவட்டவாரியாக சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு ஈடுசெய்யும் தொகை ரூ.383 கோடியே 69 லட்சம் அரசால் வழங்கப்பட உள்ளது. இந்த தொகை விரைவில் பள்ளிகளுக்கு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

The post தனியார் பள்ளிகளில் படிக்கும் 4.17 லட்சம் குழந்தைகளுக்காக ரூ.389.59 கோடி வழங்கப்படும்: இயக்குநர் நாகராஜ முருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nagaraja Murugan ,Chennai ,Schools ,Dinakaran ,
× RELATED சென்னையில் இணையவசதியுடன் 200...