×

ஆபாச படங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

டெல்லி: ஆபாசப் படங்கள் பார்ப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் மீது அம்பத்தூர் காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்திருந்தனர். தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 90-s கிட்ஸ் மது, புகைக்கு அடிமையாகி இருந்ததை போல 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தை கூற முடியும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்து கொடுமையானது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்தை 3 வாரத்துக்குள் திரும்பப் பெற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

The post ஆபாச படங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,High Court ,Justice ,Anand Venkatesh ,Delhi ,Chief Justice ,Chandrasuet Kadam ,Chennai High Court ,Ambatore, Chennai ,
× RELATED சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றார்..!!