×

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

புதுடெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வெளியிடுவதற்கு நான்கு மாத கால தாமதம் ஏன்?. தேர்தல் பத்திரம் குறித்து வெளியிட்டால் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி அளித்தார்கள் என்ற உண்மை வெளியே வந்து விடும் என்கிற பயத்தில் இருக்கிறது பிரதமர் மோடியின் அரசு. நாட்டின் அரசியல் சாசனத்தை முழுவதுமாக பாஜக ஏற்கவில்லை.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். கருத்துச் சுதந்திர செயல்கள் முழுவதையும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஏற்க மறுக்கிறது. அம்பேத்கர் பற்றி பேசிக்கொண்டு சமூகநீதி கொள்கைகள் எதையும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது பிரதமர் மோடியின் அரசு.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் 100% வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM ,Congress ,Mallikarjuna Karke ,NEW DELHI ,PRESIDENT ,DELHI ,S. B. ,PM Modi ,Government ,Mallikarjuna Garke ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...