×

கேரமல் பாப்கார்ன்

தேவையானவை:

உலர்ந்த சோளம் – ½ கப்,
வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – 50 கிராம்.

செய்முறை:

வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருக ஆரம்பித்ததும் சோளத்தைப் போட்டு கலந்துவிட்டு மூடி வைக்கவும். அதற்குள் ஒரு பாத்திரத்தில் 50 கிராம் சர்க்கரையைப் போட்டு ஒரு கரண்டிக்கும் குறைவாகத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். கலர் மாறி சர்க்கரை சேர்ந்து வந்ததும் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெயைச் சேர்க்கவும். வெண்ணெய் உருகி திக்காக சேர்ந்து வந்ததும் பொரிந்த (மூடிவைத்த சோளம் பொரிந்து ரெடியாகி இருக்கும்) சோளத்தினைச் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு இறக்கவும். சூடான சுவையான கேரமல் பாப்கார்ன் தயார்.

 

The post கேரமல் பாப்கார்ன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாழைப்பழ கேக்