×

தோகைமலை பகுதியில் கேந்தி பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

*45 நாட்கள் மட்டுமே அறுவடை காலம்

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் கேந்தி பூ என்ற செண்டு மல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைபட்டி, நாகனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கேந்தி பூூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தோகைமலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் பருவமழை சாpயாக பெய்யாத நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் விவசாய நிலங்களில் பல்வேறு பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடிசெய்வதை வெகுவாக குறைத்துவிட்ட நிலையில் மல்லி, புதினா, கீரை வகைகள், பல்வேறு மலர் சாகுபடி போன்ற பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கினர்.

இதன் ஒரு பகுதியாக கேந்தி பூ சாகுபடியும் செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சாகுபடிக்கு 3 நாட்கள் அல்லது ஈரப்பதம் உள்ள நிலையில் வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும் என்கின்றனர். மேலும் நாட்டு பூ ரகத்தில் நாற்று நட்டதில் இருந்து 90 நாட்களில் அறுவடைக்கு வருவதாகவும், அதேபோல் அறுவடையை தொடங்கியதில் இருந்து 90 நாட்களுக்கு அறுவடை செய்யலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் நாட்டு பூ ரகங்கள் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை போன்ற மாதங்களில் மகசூல் குறைவாக இருக்கும் என்றும், இதனால் பனிகாலங்களில் நாட்டு ரகத்தை சாகுபடி செய்வதை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனால் 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் கேந்திப்பூ அறுவடைக்கு வரும் என்பதால் கைபிரேட் ரகத்தை சாகுபடி செய்ய விவசாய ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர். ஆனால் அறுவடை தொடங்கியது முதல் 45 நாட்களுக்கு மட்டுமே அறுவடை காலம் இருக்கும் . ஒரு செடிக்கு 70 முதல் 100 பூக்கள் கிடைத்தால் நல்ல மகசூல் என்றும், 50 பூக்கள் வரை கிடைத்தால் போதிய லாபம் கிடைக்காது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பயிர் காலங்களில் பச்சை புளு தாக்குதல், வெட்டக்களி மற்றும் காட்டு முயல்கள் கடித்து சேதப்படுத்தும் . இதற்கு தனியார் மருந்து கடைகளில் மருந்துகள் பெற்று அடித்தால் தாக்கத்தில் இருந்து காப்பாற்றலாம். அறுவடை அதிகமாக இருக்கும் போது ரூ.20 வரையும், அறுவடை குறையும் போது ஒரு கிலோ ரூ.140 வரையும் விற்பனை ஆகும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

The post தோகைமலை பகுதியில் கேந்தி பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Tokaimalai ,Thokaimalai ,Karur district ,Neydalur ,Cheplapatti ,Mudalaipatti ,Naganoor ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு