×

சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற எங்கடின் ஸ்கிமரத்தான் போட்டி: 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

சுவிட்சர்லாந்து : சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற எங்கடின் ஸ்கிமரத்தான் எனப்படும் பனிச்சறுக்கு போட்டி காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் சுவிட்சர்லாந்தில் உள்ள மலஜாவில் இருந்து எஸ்சாண்ட் வரையிலான 42 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடத்தப்படும் இந்த போட்டி உலகின் இரண்டாவது மிக பெரிய போட்டியாகும்.

இந்த ஆண்டு நடைபெற்ற 54வது பனிச்சறுக்கு மாரத்தானில் 67 நாடுகளில் இருந்து 11,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற மகளிர் பிரிவு போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வெரோ சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். ஆடவற்பிரிவில் 21 வயதான நார்வே வீரர் முதலிடம் பிடித்து அசத்தினார்.

The post சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற எங்கடின் ஸ்கிமரத்தான் போட்டி: 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Engadin Skimarathon ,Switzerland ,Malaja ,Essant ,
× RELATED கனடாவில் ரூ.137 கோடி தங்கம் திருட்டு 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது