×

பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹக்டேவை பதவி நீக்க வேண்டும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தல்

பெங்களூரு: பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹக்டேவை பதவி நீக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா பாஜ எம்பியான அனந்தகுமார் ஹெக்டே,‘‘ இந்து மதத்திற்கான முன்னுரிமையையும் முக்கியத்துவத்தையும் மீண்டும் பெறும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், அதை செய்ய ஏதுவாக இந்த தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜவை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹக்டேவை பதவி நீக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; அரசியல் சாசனத்துக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியலமைப்பை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்து, அதற்கெதிராக பேசிய அனந்தகுமார் ஹெக்டேவை பதவி நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹக்டேவை பதவி நீக்க வேண்டும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Ananthakumar Hagde ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,Chief Minister Siddaramaiah ,Ananthakumar Hegde ,Hinduism ,
× RELATED வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால்...