- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- தரும்புரி
- முதல் அமைச்சர்
- ஸ்ரீ நரேந்திர மோடி
- அரசு கல்லூரி
- ஆப் ஆர்ட்ஸ்
- தரும்புரி
- கே
- ஸ்டாலின்
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
- சேலம்
- தின மலர்
தருமபுரி : தருமபுரியில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 8736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.350 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் ரூ.152 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 879 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 41 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் ரூ.164 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 73 திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கான முத்தான விழா இது. தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் தருமபுரிக்கு முக்கியத்துவம் உண்டு. மகளிர் சுயஉதவிக்குழு என்ற அமைப்பை தருமபுரியில்தான் கலைஞர் தொடங்கி வைத்தார். பெண்ணினத்துக்கு கலைஞர் வழங்கிய மாபெரும் அதிகாரக்கொடைதான் மகளிருக்கு சொத்துரிமை. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை இயற்றியவர் கலைஞர். பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றி இருக்கிறோம். மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவோம் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். உரிமைத் தொகையை பெற்ற பெண்கள், இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் என கூறுகின்றனர். திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட வேண்டுமென்றால் நாள்முழுவதும் பேசு வேண்டும். 24.86 மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர்.
விடியல் பயணத் |திட்டத்தின் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயன்பெறுகின்றனர். 2 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியதே அதிமுக ஆட்சியின் சாதனை. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 16 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். மகளிர் உரிமை திட்டம் மூலம் 1.15 கோடி பெண்கள் பயன்பெறுகின்றனர்.திட்டத்தின் பயன்கள் முறையாக சென்று சேர்கிறதா என்பதை அறிய நீங்கள் நலமா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயன் அடையும் வகையில் பார்த்துபார்த்து திட்டம் தீட்டி வருகிறோம்.10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவால் இதுபோன்று திட்டங்களை பட்டியலிட முடியுமா?.
மொரப்பூர்- தருமபுரி அகல ரயில்பாதைக்கு நிலஎடுப்பு பணிகள் நடைபெறுகிறது. ரூ.4 கோடியில் தருமபுரி மாவட்டத்தில் 5 சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும். வெண்ணாம்பட்டி -தருமபுரி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் பாரதிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். ஒசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நடமாடும் மருத்துவ பிரிவு ஏற்படுத்தப்படும். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க 10 கோடியில் எஃகு வேலி அமைக்கப்படும். சேலத்தில் 164 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலை திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். மாநில அரசின் ஆக்ஸிஜனான வரி வருவாயை நிறுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு. 10 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை ரூ.500 வரை உயர்த்தி விட்டு தற்போது ரூ.100 மட்டுமே ஒன்றிய அரசு குறைத்துள்ளது. மாநில அரசுகளிடம் பணம் வாங்கி திட்டங்களுக்கு தனது ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறார் மோடி. ஒன்றிய அரசு மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தை பறித்து அழிக்க பார்க்கிறது. பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துபார்த்து திட்டம் தீட்டி வருகிறோம் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.