×

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பதில்

கும்பகோணம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கும்பகோணத்தில் நேற்று அளித்த பேட்டி: இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளனர். 12 மாவட்டங்களில் 14 ஆயிரம் பேர் இதற்காக பயிற்சி பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர்ந்து பயன்பெறலாம். மழை நின்றதும் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் முழுவதுமாக செயல்படும். இதில் குறிப்பிட்ட பாட திட்டங்கள் முடிக்கப்படும். தஞ்சையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி  அளித்த பேட்டியில், ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை என சமூக வலைதளங்களில் வருவது தவறான தகவல். ஏற்கனவே முடிவு செய்தது போல் ஜனவரி,  மார்ச் மாதம் பருவ தேர்வுகள் நடைபெறும். அதுவரை எவ்வளவு பாடங்கள் நடத்தி  முடிக்கப்பட்டுள்ளது என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு ஆண்டு தேர்வு தேதி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Makesh ,Kumbakonam ,Minister of School Education ,Magesh ,Dinakaran ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...