×

போட்டி போட்டுக் கொண்டு செல்லும் அதிவேக பேருந்துகளால் உயிர் பயத்தில் பயணிகள்

மண்டபம் : தேசிய நெடுஞ்சாலையில் போட்டி போட்டுக்கொண்டு செல்லும் பேருந்து டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து, கோவை, மதுரை,திருச்சி உள்பட வெளியூர்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு விபத்துக்களை ஏற்படுத்தும் அளவிற்கு செல்வதால் பயணிகள் உயிர் பயத்தில் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் பகுதி பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்லுகின்றன. அதுபோல வெளியூர்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும் வருகின்றன. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து பத்து நிமிடத்திற்கு ஒரு அரசு பேருந்துகள் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மற்றும் மதுரை மற்றும் மதுரை வழியாக கோவை,கரூர் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதில் வழங்கப்பட்ட நேத்திற்குள் புறப்பட்டு செல்லாமல் பேருந்து ஓட்டுநர்களின் இஷ்டம் போல் புறப்பட்டு செல்வதால் போட்டி ஏற்படுகிறது.மேலும் இகோ ஏற்படுகிறது. இதனையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து அடுத்த பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகளை ஏற்றி செல்வதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அரசு பேருந்துகளை இயக்கிச் செல்கின்றனர்.

அதுபோல பேருந்து ஓட்டுநர்களுக்குள் ஏற்படும் குழப்பத்தால் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் போது பயங்கர கோபத்துடன் ஓட்டுநர்கள் அரசு பேருந்துகளை ஓட்டி செல்வதால் ராமேஸ்வரத்தில் இருத்து மதுரை திருச்சி பகுதிக்கு செல்லும் முக்கிய சந்திப்பு பேருந்து நிலையமான ராமநாதபுரம் பேருந்து நிலையம் செல்லும் வரை 60 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளை ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு ஓட்டி செல்ல முயற்சிப்பதால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையை அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஏற்படுத்துகின்றனர். இதனால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் உயிர் பயத்தில் பெரும் அச்சமடைந்து பயணிக்கின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் 10.30 மணி அளவில் கரூருக்கு மதுரை வழியாக அரசு பேருந்து புறப்பட்டு சென்றது.அதற்கு பின்பு திருச்சிக்கு அரசு பேருந்து ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. கரூர் பேருந்து தங்கச்சிமடம் பகுதியை சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த திருச்சி செல்லும் அரசு பேருந்து கரூர் பேருந்தை முந்திக்கொண்டு சென்றது. அப்போது திருச்சிக்கு சென்ற பேருந்து ராமநாதபுரம் செல்லும் வரை 60 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்கு தங்கச்சிமடம் 3 பேருந்து நிறுத்தம் மற்றும் பாம்பன் மண்டபம் வேதாளை உச்சிப்புளி வரை உள்ள பேருந்து நிறுத்தத்தில் நடுரோட்டில் மற்ற வாகனங்களுக்கு இடம் விடாமல் திருச்சி பஸ் நின்றது.

இதனால் பின்னாடி வந்த கரூர் பஸ் கடந்து செல்ல முடியாமல் கரூர் பஸ்சை ஓட்டி வந்த ஓட்டுநர் மிகவும் சிரமப்பட்டார். திருச்சி பேருந்து வழி விடாமல் நெடுஞ்சாலையின் நடுவிலே சென்று விபத்துகளை ஏற்படுத்தும் அளவிற்கு சாலையில் அலசி கொண்டு பேருந்தை பேருந்து ஓட்டுனர் இயக்கி சென்றார். இதனால் பின் தொடர்ந்து வந்த கரூர் பேருந்தில் பயணித்து வந்த பயணிகள் பெரும் உயிர் அச்சத்தில் நடத்துனர்களையும், ஓட்டுனர்களையும் பின் தொடர்ந்து செல்ல வேண்டாம். திருச்சி பேருந்து சென்றால் செல்லட்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதன்பேரில் கரூர் பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மெதுவாக பேருந்து ஓட்டிச் சென்று பயணிகளை ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். ஆதலால் தொடர்ந்து இனிமேல் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்படும் அரசு பேருந்துகளை ஒதுக்கப்பட்ட நேரத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளை இயக்கிச் செல்லும் போது ஒருவருக்கொருவர் போட்டி போடாமல் செல்ல வேண்டுமென அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி பஸ்சை இயக்கி சென்ற ஓட்டுனர்,நடத்துனர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் பஸ்சில் பயணித்து வந்த பயணிகள்,ராமேஸ்வரம் நூறுவோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post போட்டி போட்டுக் கொண்டு செல்லும் அதிவேக பேருந்துகளால் உயிர் பயத்தில் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Rameswaram bus station ,Coimbatore ,Madurai ,Trichy ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்