×

கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்… அதிமுகவை கழற்றிவிட்டு பாஜக கூட்டணிக்கு தாவுகிறது தேமுதிக!!

சென்னை : பாஜக- தேமுதிக இடையே இன்று முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளாக திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில், தேமுதிகவை தங்களது பக்கம் இழுக்க அதிமுகவும் பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், அதிமுக-வை கழற்றிவிட்டு தற்போது பாஜகவுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தேமுதிக முடிவு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் தொடங்கியது. அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் தேமுதிக கேட்டதாக கூறப்பட்டது.

ஆனால், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது.இருப்பினும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக இருக்கிறார். ஆனால் அதிமுக மாநிலங்களவை சீட்டை தேமுதிகவுக்கு தர மறுத்து வருகிறது. இதன் எதிரொலியாக அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. இதையடுத்து அதிமுகவை தவிர்த்து தற்போது பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.பாஜகவுடன் இன்று அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை தேமுதிக தொடங்கி உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் இன்று சந்திக்கின்றனர்.

The post கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்… அதிமுகவை கழற்றிவிட்டு பாஜக கூட்டணிக்கு தாவுகிறது தேமுதிக!! appeared first on Dinakaran.

Tags : Majeface ,BJP ,Demutika ,Chennai ,Temuthika ,Dimuka ,Adimuka ,Tamil Nadu ,Demudika ,BJP Alliance ,Dinakaran ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு