×
Saravana Stores

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் மயானக் கொள்ளை உற்சவம்: திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மயானக் கொள்ளை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாசி மாத அம்மாவாசை தினத்தன்று அங்காள பரமேஸ்வரி கோவில்களில் மையானக்கொள்ளை நடைபெறுவது வழக்கம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மையான கொள்ளை நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

அம்மன் மீது பெண்கள் எலும்பிச்சை பழம், கொழுக்கட்டை மற்றும் தானிய வகைகளை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். இளைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். சேனை திருவெற்றியூர் அங்காளம்மன் கோவில்களில் ஆடு மற்றும் கோழி இறைச்சி, மீன், கருவாடு, முட்டை என அம்மனுக்கு அசைவ விருது படைத்து ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

அப்போது உடுக்கை, பம்பை முழங்க நடனமாடிய பெண்கள் பூஜை செய்து உணவு பொருட்களை சூறையாடினர். சேலத்தில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மையானக்கொள்ளை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அங்காளம்மன் மற்றும் காளி வேடம் அணிந்து பக்தர்கள் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர்.

காய்கறிகள், கீரை உள்ளிட்டவற்றை அம்மன் மீது வீசி பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் வடகறந்தல் கிராமத்தில் நடைபெற்ற மையான கொள்ளை விழாவில் காட்டேரி, பத்ரகாளி, பிடாரியம்மன் உள்ளிட்ட வேடங்களை அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இதில் பங்கேற்றவர்கள் சூறையாடப்பட்ட உணவுகளை போட்டி போட்டு எடுத்து சென்றனர்.

 

The post தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் மயானக் கொள்ளை உற்சவம்: திரளாக கலந்துகொண்ட பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Mayanak Kollai Utsavam ,Tamil Nadu ,Chennai ,-robbery ,Mother's day of Masi month ,Angala Parameshwari ,Angala Parameshwari Amman Temple ,Thiruvalangadu ,Tiruvalangadu ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...