×

சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த படம் உள்ளிட்ட 7 ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்துள்ளது ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம்!

 

லாஸ் ஏஞ்செல்ஸ்: உலக சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது 96வது ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் 6 விருதுகளை ஓப்பன்ஹைமர் திரைப்படம் வென்றுள்ளது.

* சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம்

* சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது லாஸ்ட் ரிப்பேர் ஷாப் படத்திற்கு வழங்கப்பட்டது

* உக்ரைன் போரை மையப்படுத்திய ’20 Days In Mariupol’ படத்திற்கு சிறந்த ஆவணப்பட விருது வழங்கப்பட்டது

* சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்-க்கு ஆஸ்கர் விருதை ‘Godzilla Minus One’ படம் வென்றது

* சிறந்த ஒலி, சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த ‘The Zone of Interest’ படம் வென்றது

* Barbie படத்தின் ‘What Was I Made For’ என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

* Poor Things திரைப்படத்துக்கான சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வின்றார் எம்மா ஸ்டோன்

* சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை ‘The Holdovers’ படத்திற்காக Da’Vine Joy Randolph வென்றார்

* சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘War Is Over! Inspired by the Music of John & Yoko’! வென்றது

* சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை ‘The Boy and the Heron’ பெற்றுள்ளது!
வாழ்த்துக்கள், ஹயாவ் மியாசாகி மற்றும் தோஷியோ சுசுகி!

* சிறந்த மூல திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை Anatomy Of A Fall திரைப்படம் வென்றது!

* ஒப்பனை மற்றும் சிகை அலங்கார பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது POOR THINGS திரைப்படம்

* சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை ஜஸ்டின் டிரெய்ட், ஆர்தர் ஹராரி ஆகியோர் வென்றனர்

The post சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த படம் உள்ளிட்ட 7 ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்துள்ளது ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம்! appeared first on Dinakaran.

Tags : Los Angeles ,96th Academy Awards ,Los Angeles, USA ,
× RELATED ஹாலிவுட்டில் எனது இருண்ட காலம்: பிரியங்கா சோப்ரா பிளாஷ்பேக்