×

பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் முயல் வேட்டையாட வந்தவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்

 

பெரம்பலூர், மார்ச் 11: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து ஜக்கம்மா சாமி வழிபாட்டு திருவிழாவிற்காக முயல்களை வேட்டையாட ஒரு லாரியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 20பேர் நேற்று பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளுக்கு வந்திருந்தனர். இதுபற்றி வேப்பந்தட்டை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, பெரம்பலூர் மாவட்ட வனஅலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில், வேப்பந்தட்டை வனச்சரகர் சுதாகர் தலைமையில், வனவர் ஆனந்தன், வனக்காப்பாளர்கள் அபிப்பிரியா, ரோஜா ஆகியோர் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட நெற்குணம், சிறுநிலா, நூத்தப்பூர், வெண்பாவூர், பாண்டகப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள காப்பு காடுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெண்பாவூர் வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த லாரியை விரட்டிசென்று வேப்பந்தட்டையில் மடக்கி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் மணப்பாறையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. வனத்துறையினரை கண்டதும் லாரியில் இருந்த தடி, ஈட்டி, கன்னி வலை போன்றவற்றை சாலையில் வீசி விட்டு வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை வனச்சரகர் சுதாகர் 3 பேரை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிவேலன்(50), முருகேசன்(49), என்பதும் லாரி ஓட்டி வந்தவர் அன்பழகன் (43) என்பதும், அவர்கள் ஜக்கம்மா குலதெய்வ வழிபாட்டுத் திருவிழாவிற்காக வனப்பகுதியில் முயல்களை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ரூ.15 அபராதம் விதித்தார்.

 

The post பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் முயல் வேட்டையாட வந்தவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Manaparai, Trichy district ,Perambalur district ,Jakamma Sami worship festival ,Veppandatta forest ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை