×

தென்காசி அருகே மேலகரத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

 

தென்காசி, மார்ச் 11:தென்காசி அருகே மேலகரம் பேரூராட்சியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு ‘எனது வாக்கு எனது உரிமை எனது கடமை’ என்ற செயல்பாட்டின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. மேலகரம் சமுதாய நலக்கூடத்திலிருந்து கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 280 ஆண்களும், 220 பெண்களும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாம் பரிசாக ரூ. 3000, மூன்றாம் பரிசாக ரூ. 2000 மற்றும் நான்கு முதல் பத்து பரிசுகள் பெற்றவர்களுக்கு ரூ. 1000 என வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மதிவதனா, தென்காசி மாவட்ட தேர்தல் தாசில்தார் ஹென்ரி பீட்டர், தென்காசி வட்டாட்சியர் பட்டமுத்து, மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயரத்தினராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் துரை, கார்த்திக், குகன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தென்காசி அருகே மேலகரத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Tags : National Voter Awareness Marathon ,Melakaram ,Tenkasi ,Thenkasi ,Collector ,Kamal Kishore ,Melakaram Municipality ,
× RELATED குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!