×

22 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

 

கிருஷ்ணகிரி, மார்ச் 11: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் சக்கரபாணி அணிவித்தார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி, கிருஷ்ணகிரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த 22 குழந்தைகளுக்கு நகர திமுக சார்பில், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் ஏற்பாட்டின் பேரில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்தார். நகர செயலாளர் நவாப் முன்னிலை வகித்தார். இதில், தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று, அரசு மருத்துவமனையில் மார்ச் 1ம் தேதி பிறந்த 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிவரன், மற்றும் நிர்வாகிகள் அமீர்சுகேல், தினேஷ்ராஜன், அன்பரசன், அஸ்லாம், மாதவன், அரியப்பன், ஜெயேந்திரன், ஜான்டேவிட்ராஜ், கனல் சுப்பிரமணி, அரங்கண்ணல், நகர்மன்ற உறுப்பினர்கள் வேலுமணி, புவனேஸ்வரி, மீனா நடராஜன், தேன்மொழி மாதேஷ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

The post 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Tamil Nadu ,Chief Minister ,DMK ,M.K.Stal ,Minister ,Chakrapani ,Krishnagiri Government Hospital ,President ,M.K.Stalin ,
× RELATED கிருஷ்ணகிரியில் பாஜக...