×

கருங்கல் அருகே உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்

கருங்கல், மார்ச் 11: கருங்கல் அருகே மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட மேல் மிடாலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பல மாதங்களாக உடைந்து விழும் நிலையில் மின்கம்பம் ஒன்று காணப்படுகிறது. பஸ் நிறுத்தத்திலும் சாலை சந்திப்பில் இந்த மின் கம்பம் அமைந்துள்ளது. இந்த மின் கம்பத்தின் கான்கிரீட் உடைந்து விழுந்து பல பகுதிகள் எலும்பு கூடு போல் காட்சி அளிக்கிறது. பள்ளி கல்லூரிகளுக்கு பஸ்ஸில் பயணம் செய்வதற்கு இந்த மின்கம்பம் அமைந்துள்ள சாலை சந்திப்பில் தான் ஏராளமான மாணவ, மாணவிகள் நிற்பது வழக்கம்.

ஆகவே மின் கம்பம் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியம் முன் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.

The post கருங்கல் அருகே உடைந்து விழும் நிலையில் மின்கம்பம் appeared first on Dinakaran.

Tags : Karungal ,Mel Midalam ,Midalam Panchayat ,Dinakaran ,
× RELATED 2 அடி நீளத்தில் காய்த்த பயறு