- Maji
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- நாராயணசாமி
- புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி
- காங்கிரஸ்
- புதுச்சேரி
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- விரோபுரம்
- Majhi
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி ரயிலில் கஞ்சா கடத்தப்பட்டதை தீவிர சோதனைகள் மூலம் கண்டறிந்து தடுத்தோம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தோம். அப்போது அமைச்சராகவும், காங்கிரஸ் தலைவராகவும் நமச்சிவாயம் இருந்தார்.
அவருக்கு அதுபற்றி தெரியாதா? கஞ்சா விற்பனை எங்கள் ஆட்சியில் அதிகமாக இருந்தால், அப்போதே இதனை கூறி பதவியை ஏன் அவர் ராஜினாமா செய்யவில்லை? கடந்த ஆண்டு வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் கஞ்சாவால் கொலை செய்யப்பட்டார். அவர், அமைச்சருக்கு நெருக்கமாக இருந்தவர், உறவினரும் கூட. கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் செயல்பட்டதால், அந்த பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.
கஞ்சா விற்கிறவர்களை அமைச்சர் ஆதரித்ததால் தான் பிரமுகர் உயிரிழந்து இருக்கிறார். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை என்னிடம் விசாரித்தால், அதைக் கூற தயாராக இருக்கிறேன். புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்தவர்கள் தான் கஞ்சா விற்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறையின் கையை கட்டி விட்டார்கள். உள்துறை அமைச்சர் குடியிருக்கும் வில்லியனூர் பகுதியில் 7 கிலோ கஞ்சா பிடிபட்டது.
இப்படிப்பட்ட அவர் எங்கள் ஆட்சியை குறை சொல்கிறாரா?. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், பாஜ மற்றும் என்.ஆர் காங்கிரசின் 3 ஆண்டு சாதனை புதுச்சேரியை, கஞ்சா சேரியாக மாற்றியது, விலைவாசியை உயர்த்தியதுதான் என்று பல இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
The post கஞ்சா விற்கும் பாஜவினர் ஆதாரத்துடன் மாஜி முதல்வர் பட்டியல் appeared first on Dinakaran.