×

சென்னை-பெங்களூரு இடையே 2வது வந்தே பாரத் ரயில் நாளை அறிமுகம்

சென்னை: சென்னை- பெங்களூரு இடையே 2வது வந்தே பாரத் ரயில் நாளைதொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை சென்னை-மைசூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே வழித்தடத்தில் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இது தினசரி காலை 6 மணிக்கு மைசூருவில் புறப்படும்.

மாண்டியா (6.28), பெங்களூரு (7.45), கிருஷ்ணராஜபுரம் (8.04), காட்பாடி (10.33) வழியாக நண்பகல் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு காட்பாடி (6.23), கிருஷ்ணராஜபுரம் (8.48), பெங்களூரு (9.25), மாண்டியா (10.38) வழியாக இரவு 11.20 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தை சென்றடைகிறது. வாரந்தோறும் புதன் கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது.

இது நாளை (மார்ச் 12ம்) தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் 6 மணி நேரம் 30 நிமிடங்கள் பயணிக்கும் நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ரயில் கூடுதல் ரயில் நிலையங்களுடன் 6 மணி நேரம் 20 நிமிடங்களில் பயணிக்கிறது. இந்நிலையில் பெங்களூரு நகருக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியம் அறிமுகம் செய்ய உள்ளது. இது கலபுர்கி – பெங்களூரு இடையே இயக்கப்படுகிறது.

The post சென்னை-பெங்களூரு இடையே 2வது வந்தே பாரத் ரயில் நாளை அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bengaluru ,Tamil Nadu ,Mysore ,Chennai- ,Bangalore ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...