சென்னை: ரயில் பயணத்தின்போது உரிய இடத்தில் ஜன்னலே இல்லாமல் ஒரு ஜன்னல் இருக்கை கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ரயில் பயணி ஒருவர் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ரயிலில் முன்பதிவு செய்து பயணித்த ஒரு நபர், ஜன்னல் சீட் கேட்டிருந்தார். ஆனால் குறிப்பிட்ட இருக்கையை அடைந்த போது அவர் திகைத்துப்போனார்.
அந்த இருக்கையின் முன்னும், பின்னும் ஜன்னல் இருக்கிறது. ஆனால், அந்த இருக்கை பின்பக்கவாட்டில் ஜன்னல் இல்லை. இதனால் அவர் நொந்து போய் இதுதான் எனக்கு கிடைத்த ஜன்னல் சீட் என்று புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்து இணைய வாசிகள் பலரும் பலவிதமாக கிண்டல் செய்துள்ளனர்.
எப்படியோ சார்ஜிங் பாயிண்ட் இருக்கிறது என சந்தோஷப்படுங்கள் என்று ஒருவர் கூற, மற்றொரு நபரும், என் விதியை நீங்கள் புகைப்படமாக எடுத்துப்போட்டிருக்கிறீர்கள் என்று விளையாட்டாகக் கூறியுள்ளார். மற்றொரு நபர் யாரோ ஒருவர் ஜன்னலை திருடிச்சென்றிருக்க வேண்டும் என்று கேலியாக கூறியுள்ளார். இதேபோன்று ஒருமுறை விமானத்தில் ஜன்னல் டிக்கெட் முன்பதிவு செய்த ரியானாயர் என்ற பெண்ணுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
அந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட ஜன்னல் சீட்டில் சிறிய வட்டமாக ஒரு கண்ணாடி மட்டுமே இருந்தது. அவசரவழி கதவில் பொருத்தப்பட்ட அந்த சிறிய கண்ணாடியை, ஜன்னல் சீட் என்று கூறி தன்னை ஏமாற்றியதாக அந்த பெண்மணி விமான நிறுவனம் மீது குற்றம் சாட்டினார். ஆனால், அதுவும் ஒரு ஜன்னல் தான் என்று விமான நிறுவனம், தன் பேச்சில் உறுதியாக இருந்தது. இந்நிலையில் தற்போது ரயிலிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
The post ரயிலில் ஜன்னலே இல்லாத ஜன்னல் சீட்: முன்பதிவு பயணி அதிர்ச்சி appeared first on Dinakaran.