×

பிஎன்பி பாரிபா ஓபன் 3வது சுற்றில் கார்சியா

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் இண்டியன் வெல்ஸ் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட பிரான்ஸ் நட்சத்திரம் கரோலின் கார்சியா தகுதி பெற்றார்.2வது சுற்றில் பல்கேரியாவின் விக்டோரியா டொமோவாவுடன் (29 வயது, 75வது ரேங்க்) மோதிய கார்சியா (30 வயது, 26வது ரேங்க்) 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் 1 மணி, 36 நிமிடம் போராடி வென்றார். மற்றொரு 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் சாம்சனோவாவை வீழ்த்தினார்.

பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலெங்கா 6-7 (2-7), 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டியர்ன்சை 2 மணி, 53 நிமிடம் போராடி வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ், கோகோ காஃப் (அமெரிக்கா), மரியா சாக்கரி (கிரீஸ்), டாரியா கசட்கினா (ரஷ்யா), எம்மா ரடுகானு (பிரிட்டன்), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.முன்னணி வீராங்கனைகள் லெய்லா பெர்னாண்டஸ் (கனடா), விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினர்.

 

The post பிஎன்பி பாரிபா ஓபன் 3வது சுற்றில் கார்சியா appeared first on Dinakaran.

Tags : Garcia ,BNP Paribas Open ,Indian Wells ,Caroline Garcia ,Indian Wells BNP Paribas Open ,United States ,Bulgaria ,Victoria Domova ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா