×

நுவன் துஷாரா ஹாட்ரிக் தொடரை வென்றது இலங்கை

சிலெட்: வங்கதேச அணியுடனான 3வது டி20ல், நுவன் துஷாரா அபார பந்துவீச்சால் 28 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
சிலெட் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் அதிரடியாக 86 ரன் (55 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 19.4 ஓவரில் 146 ரன் மட்டுமே எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரிஷத் உசைன் 53 ரன் (30 பந்து, 7 சிக்சர்), டஸ்கின் அகமது 31 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

இலங்கை பந்துவீச்சில் நுவன் துஷாரா ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் (4-1-20-5). மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நுவன் துஷாரா ஆட்ட நாயகன் விருதும், குசால் மெண்டிஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி சாட்டோகிராம், அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

 

The post நுவன் துஷாரா ஹாட்ரிக் தொடரை வென்றது இலங்கை appeared first on Dinakaran.

Tags : Nuwan Dushara ,Hattrick ,Sri Lanka ,Bangladesh ,Nuwan Dushara Abara ,Cilet International Stadium, Bangladesh ,Hattrick Series ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...