×

சந்திரபாபுவின் சைக்கிள் துருப்பிடித்து விட்டது: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கடும் தாக்கு


திருமலை: சந்திரபாபு தலைமையிலான தெலுங்குதேசத்தின் சைக்கிள் துருப்பிடித்து விட்டது. அந்த கூட்டணியில் நோட்டாவை கூட ஜெயிக்காத கட்சி உள்ளது என முதல்வர் ஜெகன்மோகன் கடுமையாக தாக்கினார். பாபட்லா மாவட்டம், மேடராமெட்லவில் ஒய்எஸ்ஆர்காங்கிரசின் சித்தம் மாநாடு நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது:கூட்டணியுடன் நம்மை எதிர்க்க தயாராகி வரக்கூடிய நிலையில், நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளோம். சந்திரபாபு கூட்டணியில் நோட்டாவிற்கு வந்த ஓட்டு கூட வாங்காத கட்சியும், மற்றொன்று மாநிலத்தை பிரித்த கட்சியும் உள்ளது.

தனது தத்து மகனான (பவன்கல்யாணுடன்) சந்திரபாபு டெல்லிக்கு சென்று கூட்டணி வைத்துள்ளார்.சந்திரபாபுவின் சைக்கிள்(தெலுங்கு தேச கட்சி சின்னம்) துருப்பிடித்து விட்டது. இதனால் தான் வேறு கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளார். இந்த கூட்டணியை எதிர்த்து போராட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தயாராக உள்ளது. எனக்கு தோல்வி பயம் இல்லை.இவர்களே 2014ம் ஆண்டு கூட்டணி வைத்து மாநாடு நடத்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வீடு வீடாக சென்று வழங்கினர். இதில் விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சங்க கடன் தள்ளுபடி, தகுதி உள்ளவர்களுக்கு 3 சென்ட் நிலம், பெண் குழந்தை பிறந்தால் ரூ.25 ஆயிரம் தருவதாகவும், சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறினார்.

பாஜ சிறப்பு அந்தஸ்து தருவதாக கூறினார்கள். ஆனால் ஒன்றாவது செய்தார்களா? அதேபோன்று மீண்டும் தற்போது அதே மூன்று பேர் கூட்டணி வைத்து பொய் வாக்குறுதிகளுடன் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வருகிறார்கள். நமது ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி லஞ்சம் ஊழல் இல்லாமல் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கிலும், வீட்டிற்கே நேரடியாக ரூ.3 லட்சத்து 77 ஆயிரம் கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே 2019ம் ஆண்டு தேர்தலில் பெற்ற இடங்களை காட்டிலும் இந்த தேர்தலில் 175க்கு 175 பேரவை தொகுதியிலும், 25க்கு 25க்கு மக்களவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

The post சந்திரபாபுவின் சைக்கிள் துருப்பிடித்து விட்டது: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,AP ,Jekhan Mohan ,Thirumalai ,Telangudhya ,Jehanmohan ,Nota ,YSR ,Congress ,Thought Conference ,Madarametla, Babatla district ,Jekanmohan ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?