×

சட்டீஸ்கரில் பெண்களுக்கு மாதம் 1000

ராய்பூர்: தமிழ்நாடு அரசை காப்பி அடித்து சட்டீஸ்கர் மாநில பாஜ அரசு கொண்டு வந்த பெண்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்த சட்டீஸ்கர் மாநிலத்தில், பாஜ கட்சி ஆட்சியை பிடிப்பதற்காக தமிழ்நாடு அரசின் வெற்றிகரமான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காப்பி அடித்து, திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. அந்த திட்டத்தின் மூலம் சட்டீஸ்கரில் பாஜ ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில், விரைவில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், அதை குறிவைத்து பல்வேறு மாநிலங்களில் திட்டங்களை தொடங்கி வைத்து வரும் பிரதமர் மோடி, சட்டீஸ்கரில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘மாதரி வந்தன்’ திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘‘இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு முதல் கட்டமாக ரூ.655 கோடி பணம் அவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்க வேண்டுமென்ற இலக்குடன் பாஜ அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது இதை 3 கோடி பெண்கள் என்கிற உயர்த்தப்பட்ட இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்’’ என்றார். தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்ட போது, எதிர்க்கட்சியான பாஜ விமர்சனம் செய்த நிலையில், அவர்கள் ஆளும் மாநிலத்தில் இதே திட்டத்தை காப்பி அடித்து பிரதமர் மோடியே அதை தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டத்தை ஏற்கனவே கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், டெல்லி மாநிலங்கள் பின்பற்றி இதே போன்ற மகளிர் நிதிஉதவி திட்டத்தை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சட்டீஸ்கரில் பெண்களுக்கு மாதம் 1000 appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Raipur ,Modi ,BJP ,
× RELATED ஏழைகளின் உணவுக்கு நான் கேரண்டி: பிரதமர் மோடி