×

மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

ராமேஸ்வரம்: மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள் பாலித்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மகா சிவராத்திரி பத்தாம் திருநாளான இன்று அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின் ஸ்படிகலிங்க தரிசனமும் தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றன. காலை 9 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்து அருள்பாலித்தனர்.

இன்று அமாவாசை என்பதால் அதிகாலை 5 மணி முதல் அக்னிதீர்த்த கடற்கரையில் கூடிய ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்கடலில் நீராடி தர்ப்பணம் செய்து திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். பின் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராடி சுவாமி-அம்பாளை தரிசித்தனர். மதியம் 1 மணிக்கு மேல் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி அருள்பாலித்தனர்.

மாலை 6 மணிக்கு மேல் அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படியில் சிறப்பு தீபாராதனை முடிந்து சுவாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதியில் உலா வந்து கோயிலை வந்தடைந்ததும் சன்னதியில் அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது.

The post மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல் appeared first on Dinakaran.

Tags : Agni-Diththa ,Masi New Moon ,Rameswaram ,Rameshwaram Agni Tirtha ,Swami-Ambala ,Rameswaram Ramanathaswamy Temple ,Maha Shivratri ,Agni Tirtha ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...