×

பாஜக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சென்னை: தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது, அதற்கு அதிமுகவும் துணைபோகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை இறக்கிவிட்ட பா.ஜ.க. தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவிவிட்டுள்ளது.

மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது; “போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்தவுடனே ஜாஃபர் சாதிக்கை திமுகவில் இருந்து நீக்கிவிட்டோம். அவருக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக அரசை களங்கப்படுத்தும் நோக்கோடு போதைப்பொருள் தடுப்புப் பிரிவை (NCB) பாஜக களமிறக்கி விட்டுள்ளது. பாஜகவின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது.

ஜாஃபர் சாதிக்கை தேடப்படும் நபராக | பிப்.15ம் தேதி அறிவித்ததாக NCB கூறியுள்ளது. ஆனால், பிப் 21ம் தேதி ‘மங்கை’ திரைப்படத்தின் விழாவில் அவர் கலந்துகொண்டுள்ளார். அப்போது NCB எங்கே போனது?, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்திய பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவையும் பயன்படுத்துகிறது. இந்தியாவில் போதை பொருள் நடமாட்டத்திற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான் காரணம்

பாஜகவுடன் அதிமுகவும் கைகோர்த்து செயல்படுகிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துவதை முழுமையாக தடுத்து வைத்துள்ளோம். குஜராத், மகாராஷ்டிராவில் தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. திமுக மீது அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

The post பாஜக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Law ,Minister Ragupathi ,Chennai ,J. K. Minister ,Ragupati ,J. K. ,Law Minister Ragupathi ,
× RELATED சொல்லிட்டாங்க…