×

வரும் 17, 31ம் தேதிகளில் நாகர்கோவில்-சென்னை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சேலம்: நாகர்கோவில்-சென்னை இடையே வரும் 17, 31ம் தேதிகளில் மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சென்னைக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்து வருகிறது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க விடுமுறை கால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் நாகர்கோவிலில் இருந்து கேரளா, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், வரும் 17, 31ம் தேதிகளில் மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதன்படி, நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06021) வரும் 17, 31ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் மாலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருவனந்தபுரம், கொல்லம், செங்கானூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு வழியே போத்தனூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.55க்கும், திருப்பூருக்கு அதிகாலை 4.58க்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 5.40க்கும் வந்து சேலத்திற்கு காலை 6.47 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியே சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் சிறப்பு ரயில் (06022) வரும் 18, ஏப்ரல் 1ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.47 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், ஈரோட்டிற்கு இரவு 8.45க்கும், திருப்பூருக்கு இரவு 9.38க்கும், போத்தனூருக்கு இரவு 10.24க்கும் சென்று பாலக்காடு, எர்ணாகுளம் டவுன், திருவனந்தபுரம் வழியே நாகர்கோவிலுக்கு அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post வரும் 17, 31ம் தேதிகளில் நாகர்கோவில்-சென்னை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil- ,Chennai ,Railway Administration ,Salem ,administration ,Tamil Nadu ,Kerala ,Dinakaran ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...