×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தலையில் குடை அணிந்து தேயிலை பறிக்கும் பெண்கள்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நீரோடைகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ளது. இதனால் வனவிலங்குள் இடம் பெயர்ந்து குடியிருப்பு வருவது அதிகரித்துள்ளது.

இதனால் மனித-விலங்கு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. நேற்று தேயிலைத்தோட்டங்களில் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தங்களது தலைகளில் குடைகளை அணிந்தபடி தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுசுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தலையில் குடை அணிந்து தேயிலை பறிக்கும் பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Nilagiri district, ,Bandalur district ,Dinakaran ,
× RELATED காவல் துறையினர் சார்பில் பழங்குடியினருக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு