×

கூட்டணி கட்சியினரை இழுத்த பாஜ: கே.பி.ராமலிங்கம் அடடா விளக்கம்

பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் இல்லத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய மாற்றுக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் பாஜவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி அவர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நிருபர்களை கே.பி.ராமலிங்கம் சந்தித்தார். தொடர்ந்து கூட்டணி கட்சியான ஐஜேகே கட்சியில் இருந்து விலகியவர்கள் பாஜவில் இணைந்தது பற்றிய கேள்விக்கு பதில் கூறுகையில்,

‘அவர்கள் எங்களோடு கூட்டணியில் சேர்ந்துள்ளார்கள். அதன் தலைவர் பாஜ உடன் சேர்ந்து பணியாற்ற கூறினார். அதை கட்சியினர் எப்படி புரிந்து கொண்டுள்ளார்கள் என தெரியவில்லை. அதனால் பாஜவில் சேர்ந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த கட்சியின் தலைவர் பாஜ சின்னமான தாமரையில்தான் போட்டியிட உள்ளார். அதனால் கட்சியில் சேர்ந்தார்கள்’ என்றார்.

The post கூட்டணி கட்சியினரை இழுத்த பாஜ: கே.பி.ராமலிங்கம் அடடா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,KP Ramalingam ,vice-president ,AIADMK ,KP ,Ramalingam ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘ரோடு ஷோ’..!!