×

ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்டது கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை 2022 ஜனவரியில் தொடங்கப்பட்டது. கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் கலைஞர் -100 நூல் ஆவணங்கள் தயாரிப்பதற்கான வழிகாட்டுக் குழுத் தலைவராக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செயல்பட்டு வருகிறார்,

‘கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை’ தலைவராக முனைவர் மு.கலைவேந்தனும், கவிஞர் சண்.அருள்பிரகாசமும் இணைந்து கலைஞர் தமிழ் குறித்த 100 நூல்கள் தயாரிக்கப்பட்டு, திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகத்தால் பிரசுரிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகத்தால் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்த 100 நூல்களை வெளியிட்டார்.

கலைஞரின் தமிழ்வழிக் கல்விக் கனவு-மருத்துவர் சு.நரேந்திரன், கலைஞர் கண்ட அய்யனும் அடிகளும்-மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி, கலைஞரும் வள்ளுவரும்-முனைவர் வி.ஜி.சந்தோசம், கலைஞரின் கவிதை மழையில் நனைந்தேன் – முனைவர் சரசுவதி ராமநாதன், கலைஞரின் படைப்புலகில் பெண்ணியம்-முனைவர் உலகநாயகி பழனி, கலைஞர் படைப்புலகம் – கவிஞர் சண்.அருள்பிரகாசம், ஐந்தமிழ் அறிஞர் கலைஞர்-முனைவர் சண்முக.செல்வகணபதி, வரலாற்றில் கலைஞர் கேள்விகள் ஆயிரம் – முனைவர் மு.கலைவேந்தன்,

கலைஞரே ஒரு கவிதைதான் – பாவலர் நொச்சிப்பூந்தளிரன், கலைஞரின் மேடைத்தமிழ்-முனைவர் பா.வேலம்மாள், கலைஞர் பிள்ளைத்தமிழ் – புலவர் பூவை. சு.செயராமன், கலைஞரும் வீறுகவியரசரும்-பாரி முடியரசன், கலைஞரின் திருக்குறள் வெளிப்பாட்டுத்திறன் – முனைவர் கலைமகள் சிவஞானம், கலைஞர் செம்மொழி தமிழும் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் – முனைவர் இரா.ராசாமணி, கலையும் கலைஞரும் – முனைவர் அருட்செல்வி கிருபை ராசா,

கலைஞர் சிறுகதைகளில் புரட்சி-புலவர் ப.கனகரத்தினம் உள்ளிட்ட கலைஞர் தமிழ் குறித்த 100 நூல்கள் அதில் அடங்கும். இந்த 100 நூல்களைப் படைத்தவர்களில் 62 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, திராவிட இயக்க எழுத்தாளர் கவிஞர் சண்.அருள்பிரகாசம், திருவையாறு, ஒளவைக் கோட்டம் நிறுவனத் தலைவர் முனைவர் மு.கலைவேந்தன், எழுத்தாளர் இமயம் மற்றும் நூலாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்டது கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Principal ,K. ,Stalin ,Chennai ,Artist Tamil Study Seat ,Chief Minister ,M.U. K. Stalin ,Study Seat ,Principal Mu. K. Stalin ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...