×

அ.தொ.உ.மீ. சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய இன்று மாலை நேர்காணல்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு (அ.தொ.உ.மீ.) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள், சென்னை, மயிலாப்பூர் 72-75, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நியூ உட்லண்டஸ் ஓட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உரியக் கட்டணத் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து அன்றே உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மாலை 6 மணிக்கு நேர்காணல் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அ.தொ.உ.மீ. சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய இன்று மாலை நேர்காணல்: ஓபிஎஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : A.T.U.M. ,OPS ,CHENNAI ,AIADMK Volunteers' Rights Rescue Committee ,ADMK ,Coordinator ,O. Panneer Selvam ,Lok Sabha ,Tamil Nadu ,Puducherry, Chennai, Mylapore 72-75 ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...