×

நாடாளுமன்ற தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதி ஒதுக்கீடு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்!

திமுக – 21
காங்கிரஸ் – 9 + புதுச்சேரி
விசிக – 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ – 2
சிபிஎம் – 2
மதிமுக -1
இயூமுலீ – 1 (ராமநாதபுரம்)
கொமதேக – 1 (நாமக்கல்)

இதில், காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மட்டும் நாமக்கல் தொகுதியில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

 

The post நாடாளுமன்ற தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதி ஒதுக்கீடு! appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Chennai ,Congress ,Vic ,Dignity ,Muslim League ,Congress party ,Timika ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...