×

தேனாம்பேட்டையில் விசிக-வின் துணைப் பொதுச் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம், தேனாம்பேட்டை, வேப்பேரி உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 6 வாகனங்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் பிரின்ஸ் கார்டன் 11வது தளத்தில் மகாவீர் இரானி என்பவர் வீட்டில் சோதனை நடத்துகின்றனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் செல்வராஜ் என்பவர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூன் இருந்து வருகிறார்.

The post தேனாம்பேட்டையில் விசிக-வின் துணைப் பொதுச் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : general secretary ,VISA ,Thenampettai ,Chennai ,Chennai RApuram ,Thenampet ,Vepperi ,Prince Garden ,Vepperi EVK Sampath Road ,Deputy General Secretary ,Dinakaran ,
× RELATED சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்:...