- தேவகோட்டை
- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் திணைக்களம்
- திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- மானாமதுரை தயாபுரம் TLM சமுதாய மருத்துவமனை
- தேவகோட்டை கைலாசநாதபுரம்
- தேவகோட்டை நகர்மன்றம்
- தின மலர்
தேவகோட்டை, மாரச் 9: தேவகோட்டை கைலாசநாதபுரம் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மானாமதுரை தயாபுரம் டிஎல்எம் சமுதாய மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியத. முகாமை தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ் துவங்கி வைத்தனர். முகாமில் பொதுமக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ெஹச்ஐவி எய்ட்ஸ்,ம் தொழுநோய் சம்பந்தமான பரிசோதனைகள் செய்து விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டு மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டது.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார், டிஎல்எம் சமுதாய மருத்துவமனையின் மருத்துவர் ஆண்ட்ரியா, கவுன்சிலர் பிச்சையம்மாள் விக்னேஸ்வரன், இயல் முறை டெக்னீசியன் வனஜா, திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் வேல்முருகன், நகராட்சி சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், செவிலியர் ஜூலியட் மெர்சி, மக்களை தேடி மருத்துவ சார்பாக கவுரி, உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமை திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆலோசகர் முருகன் ஒருங்கிணைத்தார்.
The post தேவகோட்டையில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.