- தியாகராஜா சுவாமி கோயில் இடிப்பு
- திருவாரூர்
- கலெக்டர்
- சாருஸ்ரீ
- தியாகராஜ சுவாமி கோயில்
- திருவரூர்
- தியாகராஜா சுவாமி கோயில்
திருவாரூர், மார்ச் 9: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் 21ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பொது தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது.
மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும் 21ம் தேதி இந்த ஆழித்தேரோட்டமானது நடைபெறவுள்ள நிலையில் இதற்காக மாவட்டத்திற்கு அன்றையதினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும், அன்றைய தினம் நடைபெறும் 11ம் வகுப்பு பொது தேர்வானது வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
The post தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: 21ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.