×

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தொழிற் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி

 

புதுக்கோட்டை, மார்ச்9: புதுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர்களால் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நேற்று துவக்கி வைத்தார். சிப்காட் நிறுவனம் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களிலும் மகளிர்களால் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சிப்காட் தொழிற் பூங்காவில் 500 மரக்கன்றுகள் நடும் விழா இன்றையதினம் சிப்காட் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, சிப்காட் நிர்வாக திட்ட அலுவலர் கண்ணன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் திரிபுர சுந்தரி, உதவிப் பொறியாளர் பாலமுரளி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தொழிற் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி appeared first on Dinakaran.

Tags : Industrial Park ,International Women's Day ,Pudukottai ,District Collector ,Mercy Ramya ,Pudukottai Chipkot Industrial Park ,Chipcott Company ,Chipcott ,
× RELATED ஆலங்குடி அருகே குடிநீர் வழங்க கோரி...