×

கொள்ளிடம் பகுதியில் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி

கொள்ளிடம்,மார்ச் 9: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் பனிப்பொழிவு லேசாக இருந்து வந்தது. இரவு நேரங்களில் குளிரும் மிகவும் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து பகல் நேரங்களில் அதிக வெப்பமாகவும் வறண்ட வானிலையும் நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் மிதமான பனிப்பொழிவு துவங்கி அதிகாலை 4 மணியிலிருந்து காலை 8 மணி வரை அதிக பனிப்பொழவு இருந்து வருகிறது. நேற்று காலை அதிக பனிப்பொழிவு இருந்ததால் சாலை எங்கும் புகை மூட்டம் போல் காட்சியளித்தது.

சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், கால்நடையாக செல்பவர்களும் சிரமத்துடன் சென்று கொண்டிருந்தனர். அனைத்து வாகனங்களிலும் உள்ள முகப்பு விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் இருந்தன. ஆனால் சென்ற வருடத்தை காட்டிலும் இந்த வருடம் பனிப்பொழிவு மிகவும் குறைந்தே காணப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

The post கொள்ளிடம் பகுதியில் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Kollidum ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...