×

கரூர் நீதிமன்றத்தில் மகளிர் தின விழா

 

கரூர், மார்ச்9:உலகம் முழுதும் மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மகளிர் தின விழா கொண்டாடுவதில் அரசு மற்றும் பொதுமக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. இறுதி நாள் நிகழ்ச்சியாகமாவட்ட நீதித்துறை. கரூர் மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், கரூர் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது .

நேற்று மகளிர் மகளிர் தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி, கட்டுரை போட்டி வினாடி வினா போட்டி, பேச்சுப்போட்டி பலூன் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு துணை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் பாக்கியம் தலைமை வகித்தார். ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அம்பிகா, பார் அசோசியேஷன் சங்க செயலாளர் தமிழ்வண்ணன்,

கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் வைத்தீஸ்வரன், கரூர் ஜூடிசியஸ் மாஜிஸ்ட்ரேட் சொர்ண குமார், வழக்கறிஞர்கள் ராஜாத்தி பானுமதி, குடும்ப நல நீதிபதி எழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசு வழங்கினார். இதில்ஏராளமான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post கரூர் நீதிமன்றத்தில் மகளிர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Karur Court ,Karur ,Women's Day Ceremony ,Dinakaran ,
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்