×

கல்குவாரி லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் அதிகாரி அபராதம் விதித்தார் செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு மார்ச் 9: செய்யாறு அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் நேற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறு அடுத்த வன்னியந்தாங்கல் கிராமத்தின் வழியாக செல்லும் கல்குவாரி லாரிகள் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக செல்வதால் பல விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து கல்குவாரி உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரி மற்றும் போலீசாரிடம் கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். மேலும், நாளுக்குநாள் பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் கிராம மக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அவ்வழியே பாறாங்கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருணாநிதி, சட்ட விரோதமாக அதிக பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளுக்கு அபராதம் விதித்தார். தொடர்ந்து, லாரிகளில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு சென்றால் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுப்படும் என எச்சரித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post கல்குவாரி லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் அதிகாரி அபராதம் விதித்தார் செய்யாறு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Seyyar ,Vanniyanthangal ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...