×

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிப்காட் தொழில் பூங்காவில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

தூத்துக்குடி, மார்ச் 9: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி துவக்கி வைத்தார். தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி மரக்கன்றினை நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் (சிப்காட்) ஜோன் மேரி செல்வராணி, மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான கென்னடி, லீடு டிரஸ்ட் இயக்குநர் பானுமதி, அன்னை தெரெசா பொறியியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், சிப்காட் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிப்காட் தொழில் பூங்காவில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : International Women's Day ,Chipkot Industrial Park ,Thoothukudi ,District Collector ,Lakshmipathi ,Chipcot Industrial Park ,Thoothukudi Chipcot Industrial Park ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...