×

என் பேச்சை தொடர்ந்து கேட்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர்: பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு

புதுடெல்லி: தேசிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா முதன்முறையாக நேற்று நடைபெற்றது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, சிறந்த கதை சொல்லி, ஆண்டின் சிறந்த படைப்பாளி, சமூக மாற்றத்துக்கான படைப்பாளி, பசுமை சாம்பியன், விவசாய படைப்பாளி உள்ளிட்ட 20 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார். பீகாரைச் சேர்ந்த யூ டியூபரும், பிரபல பாடகியுமான மைதிலி தாக்கூருக்கு இந்த ஆண்டுக்கான கலாச்சார தூதர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கும்போது, ‘ எப்போதும் எனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்து விட்டனர். நீங்கள் ஒரு பாடல் பாடுகிறீர்களா?’ என்று மோடி கேட்டார். அதற்கு மைதிலி சரி என்றார். உடனே மோடி,’ அப்படியானால் எனது பேச்சு மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது என்று ஒத்துக்கொள்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு மைதிலி, நான் அவ்வாறு கூறவில்லை. மக்களுக்காக பாடுகிறேன்’என்றார். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது.

* தமிழ்நாட்டு பெண்ணின் காலில் 3 முறை விழுந்து வணங்கிய மோடி
சிறந்த கதை சொல்பவர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி என்பவருக்கு விருது கிடைத்தது. அவர் விருது பெற மேடைக்கு சென்ற போது பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கினார். பதிலுக்கு மோடியும் அந்த பெண்ணின் காலை தொட்டு 3 முறை வணங்கினார். பின்னர் விருது வழங்கிய மோடி கூறுகையில்,’ நமது நாட்டில் காலை தொட்டு வணங்குவது பாரம்பரியமாக இருக்கிறது. எனது காலில் எனது மகள் விழும்போது மனம் பாதிப்படையும்’ என்றார். அதற்கு கீர்த்தனா என்னை மன்னியுங்கள் என்றார். என்றார்.

The post என் பேச்சை தொடர்ந்து கேட்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர்: பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,creators ,PM ,Delhi Bharat Hall ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?