புதுடெல்லி: டெல்லியில் சாலையில் தொழுகை நடத்தியவர்களை எட்டி உதைத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வடக்கு டெல்லி, இந்தர்லோக் மெட்ரோ அருகே சாலையில் நேற்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தினர். இருப்பினும், தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது, டெல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை கலைக்கும் விதமாக சிலரை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து, பதற்றம் ஏற்பட்டது. அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு டெல்லி காவல் துணை ஆணையர் மனோஜ் மீனா உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சப் இன்ஸ்பெக்டரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
The post டெல்லி சாலையில் தொழுகையில் ஈடுபட்டவர்களை எட்டி உதைத்த எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.