×

கனடாவில் பயங்கரம் இலங்கையை சேர்ந்த 6 பேர் சரமாரியாக குத்திக்கொலை: 19 வயது கல்லூரி மாணவன் கைது

டொரான்டோ: கனடாவில் இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை குத்தி கொன்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள பார்ஹெவன் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த விக்கிரமசிங்கே என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி தர்ஷினி திலந்திகா ஏகான்யகே(35). இவர்கள் ஒரு மகன்,மகள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு திடீரென வந்த ஒரு இளைஞர் விக்கிரமசிங்கே குடும்பத்தினர் ஒருவரையொருவர் கத்தியால் குத்தினான். எதிர்பாராத தாக்குதலில் தர்ஷினி, அவரது 4 குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் என 6 பேர் துடிதுடித்து இறந்தனர். தர்ஷினியின் கணவர் படுகாயமடைந்தார். இதில் இரண்டரை மாத பெண் குழந்தை மற்றும் 2 வயது குழந்தைகளும் அடங்குவர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட இளைஞன் தப்பி ஓடிவிட்டான்.போலீசார் வழக்கு பதிவு செய்து இலங்கையை சேர்ந்த பெப்ரியோ டி சொய்சா(19) என்ற கல்லூரி மாணவனை கைது செய்தனர்.

இதுகுறித்து ஒட்டாவா தலைமை போலீஸ் அதிகாரி எரிக் ஸ்டப்ஸ் ‘‘சந்தேக நபரிடம் இருந்து கூர்மையான ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது.படுகொலை செய்யப்பட்டவர்கள் சமீபத்தில் தான் கனடாவுக்கு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது’’ என்றார். 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஒட்டாவாவில் இதுபோன்ற படுகொலைகள் ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் ஒட்டாவாவில் நடந்த மிகக் கொடூரமான படுகொலை இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கனடாவில் பயங்கரம் இலங்கையை சேர்ந்த 6 பேர் சரமாரியாக குத்திக்கொலை: 19 வயது கல்லூரி மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Canada ,Toronto ,Wickramasinghe ,Parkhaven, Ottawa ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி: 17 வயது குகேஷ் அபார சாதனை