×

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது

சென்னை: இந்த ஆண்டு உலக மகளிர் தினத்தில் கருப்பொருளான”பெண்களில் முதலீடு செய்யுங்கள் பெண்கள் முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்” என்பதை உண்மையாக்க உலக மகளிர் தினத்தையொட்டி 23 சிப்காட் தொழில் பூங்காக்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

சிப்காட் நிறுவனம் நீடித்து நிலைபெறத்தக்க வகையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்பூங்காக்கள் விளங்கிட, சிப்காட் அதன் திறந்த வெளிப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அருகிலுள்ள பஞ்சாயத்துகளில் இப்போது நடப்படவுள்ள 1 லட்சம் மரக்கன்றுகளை சேர்த்து 7 லட்சம் மரக்கன்று நடவு செய்து சிப்காட் நிறுவனம் பராமரிப்பு செய்யும்.

மேலும் இந்த ஆண்டிற்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே சிப்காட் நிறுவனத்தின் நோக்கம். இதனை தொடர்ந்து உலக மகளிர் தினத்தையொட்டி, நேற்று சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள நாவலூர் ஏரி பகுதியில், சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில் ராஜ் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இயக்குநர் ராகுல்நாத் ஆகியோர் 1000 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

The post உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது appeared first on Dinakaran.

Tags : International Women's Day ,Chipcot Industrial Parks ,CHENNAI ,Chipcot ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...