×

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி அறிக்கை: ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

அந்தவகையில், தமிழ்நாடு அரசும் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அமைச்சரவையை கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். மேலும், இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

The post அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,PMK ,President ,Union Cabinet ,Union government ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...