×

அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்த 59 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 59 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-2 தேர்வுகளில் தொழிலாளர் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 37 தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 8 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் (மாற்றுத் திறனாளிகள்),

உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து – ஆங்கிலம்) தொழிற்பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்ட இருவர் மற்றும் இளநிலை உதவியாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என மொத்தம் 59 பேருக்கு பணி நியமன ஆணைகள் சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறையின் கூட்டரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

மேலும், 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டுகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர், முதல்வர்கள் நால்வர், பயிற்சி அலுவலர்கள் நால்வர், உதவி பயிற்சி அலுவலர், 8 பயிற்றுநர்கள் மற்றும் இளநிலை பயிற்சி அலுவலர் 8 பயிற்றுநர்கள் என மொத்தம் 24 அலுவலர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் குமார் ஜயந்த், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் சுந்தரவல்லி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்த 59 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,C.V.Ganesan ,Government Staff Selection Commission ,CHENNAI ,Tamil Nadu Government Staff Selection Commission ,Labor Department ,Tamil Nadu Public Service Commission ,Public Service Commission ,Dinakaran ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்